தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission
பணியின் பெயர்: Departmental Examinations – DEC 2022
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இன்று முதல் அக்.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரு.200 தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30யும் சேர்த்து ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:எஸ்பிஐ வங்கியில் 1,673 காலி பணியிடங்கள்.. ஆரம்ப சம்பளம் ரூ.40,000.. தேர்வு தேதி அறிவிப்பு..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 16 வயது முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு தேதி:
இப்பணிக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வு மையம்:
விண்ணப்பதாரர்கள் அரசு பணியில் இருந்தால், பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும். மேலும் இது நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை:
முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடங்கும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
தேர்வு:
இரண்டு வகை தேர்வுகள் மூலம் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி Objective Type in Computer Based Test - 12.12.2022 முதல் 16.12.2022 வரையிலும், Descriptive Type தேர்வு 17.12.2022 முதல் 21.12.2022 வரையிலும் நடைபெறவுள்ளன.
மேலும் படிக்க:தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்