இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR)-ன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (national virology institute) காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
பதவிகள்:
- Project Assistant(Research Assistant)
- Project Assistant (Technical Assistant)
- Project Technical-III(Lab Technician)
- Project Multitasking Staff
ஊதிய விவரம்:
- Project Assistant(Research Assistant) - ரூ.31,000/ மாதம்
- Project Assistant (Technical Assistant) - ரூ.31,000/ மாதம்
- Project Technical-III(Lab Technician) - ரூ.18,000 / மாதம்
- Project Multitasking Staff - ரூ.15,800 / மாதம்
வயது வரம்பு:
- Project Assistant(Research Assistant), Project Assistant (Technical Assistant), Project Technical-III(Lab Technician) பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Project Multitasking Staff பணிக்கு விண்ணப்பிக்க 25-க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- Project Assistant(Research Assistant), Project Assistant (Technical Assistant) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Project Technical-III(Lab Technician), Project Multitasking Staff பணிக்கு அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, ரோடியோலஜி, ரோடியோகிராபி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்கும் முறை:
- http://forms.gle/HadnoeHKRTKMPWr7 என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Director,
ICMR-NIV,
Pune.