காலியாக உள்ள நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்இ தெரிவித்துள்ளது. 1089 காலி பணியிடங்களுக்கான தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்இ தெரிவித்துள்ளது. 1089 காலி பணியிடங்களுக்கான தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:செபியில் காலியாக உள்ள 24 பணியிடங்கள்.. பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. உடனே முந்துங்கள்..
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி கணினி வழியில் நடைபெறுகிறது. சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இல்லையென்றால் தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சம்பந்தப்பட்ட தொழிற்துறையில் (Surveyor, Draftsman) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பவர்கள் 32 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். இதில் குறிப்பாக தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர்/ உதவி வரைவாளர் பதவிக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்.டி, பி.சி, ஒபிசி என அனைத்து வகுப்புகளில் ஆதரவற்ற விதவைகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்
மேலும் டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 100 கட்டணமாகவும் நிரந்தர பதிவுக் கட்டணமாக ரூ.150 யும் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் நிர்ணயக்கப்பட்ட தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. கணிணி வழியில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று , மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட 4% இடஒதுக்கீடு இத்தேர்வில் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:தரவரிசைப்பட்டியலை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.. முதல் 5 இடத்தை பிடித்த கல்லூரிகள் எவையெவை..?