TNPSC குரூப் 1 தேர்வுகள்.. வெளியான ஹால் டிக்கெட் - டவுன்லோட் செய்வது எப்படி?

Ansgar R |  
Published : Aug 03, 2023, 06:53 PM IST
TNPSC குரூப் 1 தேர்வுகள்.. வெளியான ஹால் டிக்கெட் - டவுன்லோட் செய்வது எப்படி?

சுருக்கம்

குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தற்போது வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இதை உரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை குருப் 1 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

தேர்வு எழுத உள்ளவர்கள் tnpscexams.in என்ற இந்த இணையதள லிங்கை பயன்படுத்தி தங்களுடைய தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண் கொண்டு இந்த ஹால் டிக்கெட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் நான் முதலவன் திட்டம்.. ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு - மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

பல்வேறு அரசு பதவிகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான முதற்கட்ட குரூப் 1 தேர்வுகள் நடைபெற்றது. 

இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்பொழுது எழுத்து தேர்வுகள் நடைபெற உள்ளது. இது ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்பொழுது இதற்கான ஹால் டிக்கெட் தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15,000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்