பிரதமரின் YASASVI கல்வி உதவித் தொகை திட்டம்.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

By Ansgar R  |  First Published Jul 30, 2023, 3:09 PM IST

பிரதமர் மோடியின் YASASVI கல்வி உதவி திட்டத்தின் கீழ், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் மேற்படிப்பை மேற்கொள்ள உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்த 2023-24ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள், சீர்மரபினர், மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த 3000க்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பிரதமரின் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த கல்வி தொகைக்கான என்ட்ரன்ஸ் தேர்வில் பங்கு பெறலாம். அந்த பள்ளிகள் குறித்த விவரங்கள் yet.nta.ac.in என்ற இந்த இணையதளத்தில் உள்ளது. 

செமிகண்டக்டர் துறையில் விரைவான முன்னேற்றம்: ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!

அதேபோல இந்த நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துவங்கி வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வரை இந்த நுழைவு தேர்வினை எழுத பட்டியலில் உள்ள பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அதேபோல ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும், தேர்வுக்கான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் yet.nta.ac.in இந்த இணையதளத்தை நீங்கள் பார்க்கலாம். 

EMRS Recruitment 2023 : 4062 காலிப்பணியிடங்கள்.. அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம்

click me!