Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

By Raghupati R  |  First Published Mar 25, 2023, 8:38 AM IST

அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10, 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7, 301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7, 689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வில் 18. 36 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக குரூப் - 4 தேர்வு முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும்.

Tap to resize

Latest Videos

ஆனால் கடந்த ஆண்டுகளை விட கடந்த முறை அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த முறை தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7, 301-ல்இருந்து 10, 117-ஆக உயர்த்தப்பட்டது. இது தேர்வர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகும். அதுவும் மார்ச் கடைசிக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

இந்த நிலையில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு குரூப் - 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை https: //www. tnpsc. gov. in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வர்கள் முடிவுகளை அறிய முற்பட்டதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், கட் - ஆஃப் மதிப்பெண் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடந்ததோ வேறு. தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், கட் - ஆஃப் தற்போது உயர்ந்துள்ளது. மொத்த மதிப்பெண் 300-க்கு, 170-க்கு மேல் எடுத்தவர்களே தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5629 ஆகும். எனவே ஒட்டுமொத்த தரவரிசையில் 6000க்குள் இருக்கும் தேர்வர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

இடஒதுக்கீடு அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் 1745க்குள் இருக்கும் அனைவருக்கும் வேலை உறுதி. அதேநேரம் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1492 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை உறுதி. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1126 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவில் 197 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 

தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 844 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அருந்ததியர் பிரிவில் 200 தரவரிசைக்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பழங்குடியினர் பிரிவில் 70 ரேங்கிற்குள் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 159 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 154க்கு மேலும், BCM பிரிவினருக்கு 152க்கு மேலும், SCA பிரிவினருக்கு 151க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வர்கள் பலரும் குரூப் 4 கட்-ஆப் மதிப்பெண் என்ன என்று தேடி வரும் நிலையில் பல்வேறு வியூகங்கள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!

இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்

click me!