Latest Videos

TNPSC Group 4 Exam: இன்று நடைபெறுகிறது குரூப் 4 தேர்வு... 6,244 பணிக்கு 20 லட்சம் பேர் போட்டா போட்டி..!

By vinoth kumarFirst Published Jun 9, 2024, 9:20 AM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. 
 

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 7,247 மையங்களில் சுமார் 20 லட்சம் பேர்  எழுதவுள்ளனர். 

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. 

அதன்படி தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெற்றது. 

இதையும் படிங்க: School Working Day Increase: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! இனி சனிக்கிழமைகளில் லீவு கிடையாது!

சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 இதையும் படிங்க: School Students: 1000 ரூபாயை விட்டுடாதீங்க! பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!

இதனிடையே இன்று தேர்வு எழுத செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி டிஎன்பிஎஸ்சி முக்கிய வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோர் கருப்புநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு செல்ல வேண்டும். தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின் தங்களுக்கான இடத்தில் அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!