- Home
- Gallery
- School Working Day Increase: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! இனி சனிக்கிழமைகளில் லீவு கிடையாது!
School Working Day Increase: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! இனி சனிக்கிழமைகளில் லீவு கிடையாது!
நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Department of School Education
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
School Student
இதில் பள்ளியின் வேலை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், 1 முதல் 12ம் வகுப்புக்கான தேர்வு காலங்கள், உயர்க்கல்விக்கான வழிகாட்டு வகுப்புகள் போன்றவற்றுக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: School ReOpen: கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிகள்.. போக்குவரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
School Working Day Increase
அதாவது, 2024-25ஆம் கல்வி ஆண்டில் மொத்த வேலை நாள் 210லிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் 27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்விற்கான விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: School College Holiday: ஜூன் 21-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
School Exam Date
இதனையடுத்து, அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும் எனவும், டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 9 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் எனவும், ஏப்ரல் 28 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.