ரூ.50,000 சம்பளம்... மத்திய அரசின் சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க!

By SG Balan  |  First Published May 27, 2024, 9:55 AM IST

Sainik School Vacancy: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர், நர்ஸ், கவுன்சிலர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்புக்கு மே 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர், நர்ஸ், கவுன்சிலர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர், நர்ஸ், கவுன்சிலர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வுசெய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் உரிய வயதுவரம்பு, கல்வித்தகுதி, முன்அனுபவம், சம்பளம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

வேதியியல் ஆசிரியர்:

பி.ஜி.டி. வேதியியல் ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ. 50,000 சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு வயது வரம்பு 21 முதல் 40 வரை இருக்க வேண்டும். வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும். ஹிந்தி, ஆங்கிலம்  ஆகிய இரு மொழிகளில் வகுப்பெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கவுன்சிலர்:

கவுன்சிலர் பணிக்கு மாதம் ரூ. 45,000 சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 26 முதல் 45 வரை இருக்க வேண்டும். உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தொடர்பான ஒரு வருட டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணி அனுபவம் இருப்பதும் அவசியம்.

நர்ஸ்:

நர்ஸ் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 25,500 சம்பளம் கொடுக்கப்படும். 18 முதல் 50 வரை வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவிலியர் படிப்பில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பை முடித்தவராக வேண்டும்.

ஆய்வக உதவியாளர்:

ஆய்வக உதவியாளர் (வேதியியல்) பணிக்கு மாதம் ரூ. 28,000 சம்பளம் தரப்படும். வயதுவரம்பு 21 முதல் 35 வரை இருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவராகவும் மூன்று ஆண்டு பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்-ஆபிஸ் திறன் பெற்றவராகவும் இருப்பது அவசியம்.

PEM/PTI-Matron:

PEM/PTI-Matron பணிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.30,000. வயது 18 முதல் 50 க்குள் இருக்க இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை The Principal, Sainik School Gopalganj, State Bank of India, Narainia Branch (Code-09212) என்ற பெயருக்கு டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ssgopalganj.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பிரிட்ண் எடுத்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். உரிய சான்றிதழ் நகல்களையும் இணைத்து சுய சான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி:

The Principal, Sainik School Gopalganj, PO – HATHWA, DIST-GOPALGANJ,BIHAR-841 436

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.05.2024

இந்த வேலைவாய்ப்பு குறித்து கூடுதல் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.

click me!