டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

By SG Balan  |  First Published May 25, 2024, 10:26 AM IST

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், தேர்வுத் திட்டமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024 இல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு மற்றும் தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு!

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ-இன் முதன்மைத் புதிய பாடத்திட்டமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம்

தேர்வுத் திட்டம்

https://www.tnpsc.gov.in/English/scheme.html

click me!