அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க மிஸ் பண்ணிட்டீங்களா? அப்படினா கவலை வேண்டாம்! வெளியான குட்நியூஸ்!

By vinoth kumar  |  First Published May 21, 2024, 6:43 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் விண்ணப்பப் பதிவு துவங்கியது. இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 24/05/2024 ஆகும். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு : ரூ.48/-

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

கட்டணம் செலுத்தும் முறை: 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!