தேர்வர்களே அலர்ட்.. குரூப் 4 தேர்வு கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு.. எந்த பிரிவுகளுக்கு எவ்வளவு..? முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Jul 30, 2022, 5:46 PM IST

குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் தேர்வர்களின் கருத்துகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. 
 


கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் VAO பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.  7,301 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் தேர்வர்களின் கருத்துகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:மக்களே அலர்ட்.. மாதந்தோறும் 1.30 லட்சம் வரை சம்பளத்தில் அரசுப் பணி.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..

அதன்படி, பொது பிரிவினருக்கு 165 – 175 வரையிலும், BC/MBC/BCM உள்ளிட்ட பிரிவினருக்கு 155-165 வரையிலும், SC பிரிவினருக்கு 150-160 வரையிலும், ST பிரிவினருக்கு 145-155 வரையிலும் கட் ஆஃப் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிரிவுகளில் உள்ள உட்பிரிவுகளுக்கு கட் ஆஃப், 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என கூறப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க:1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு

click me!