இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

மேலும் படிக்க:1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு ..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? டிஎன்பிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு
மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மொத்த காலிப்பணியிடங்களில் 10% இடங்களில் விளையாட்டு பிரிவில் கீழ் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடிமகன்களுக்கு ஷாக்!! 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடை மூடல்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு..
இருப்பினும், இந்த ஆட்சேர்ப்பில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.