டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியானது.. எவ்வாறு தெரிந்து கொள்வது ? முழு விபரம்

Published : Nov 08, 2022, 07:58 PM ISTUpdated : Nov 08, 2022, 08:05 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியானது.. எவ்வாறு தெரிந்து கொள்வது ? முழு விபரம்

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும், ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுகளையும் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி இதுகுறித்து அறிக்கை ஒன்றினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

அதில், ‘ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

இதனைத்‌ தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நிறைவடையும்‌ தருவாயில்‌ உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர்‌ மேற்படி‌ தேர்வின்‌ முடிவுகள்‌ விரைவில்‌ வெளியிடப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தி, சமூக ஊடகங்களில்‌ வெளிவரும்‌ ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்‌ எனவும்‌, அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ இணையதளத்தினை (https://www.tnpsc.gov.in/) மட்டுமே அணுகுமாறும்‌ தெரிவிக்கப்படுகிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. (https://www.tnpsc.gov.in/) என்ற இணையத்தளம் மூலமாக போட்டித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Jobs: அரசு சட்டப்பணிக்கு நேரடி வாய்ப்பு! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!