சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவிலில் காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோவில்
காலி பணியிடங்கள்: 8
பணியின் பெயர்: கணினி இயக்குபவர் , மின் பணியாளர், அர்ச்சகர் நிலை 2, ஓதுவார், சுயம்பாகி, மேளக்குழு நாதஸ்வரப் பணி, காவலர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
இராயப்பேட்டை,
சென்னை-14.
மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
கல்வித் தகுதி:
கணினி இயக்குபவர் - தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மின் பணியாளர் - அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B சான்றிதழ் இருக்க வேண்டும்.
அர்ச்சகர் - ஆகமவிதப்பள்ளி அல்லது வேத பாடச்சாலையில் குறைந்தபட்ச 1 ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.
ஓதுவார் - தேவார பாடச்சாலையில் அல்லது அதன் தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுயம்பாகி - ஆகமவிதிப்படி கைவைத்தியம் மற்றும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேளக்குழு நாதஸ்வர பணி - இசைப்பள்ளிகளில் சான்றிதழ் இருக்க வேண்டும்.
காவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
கணினி இயக்குபவர் - மாத சம்பளமாக ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை வழங்கப்படும்.
மின் பணியாளர் - மாத சம்பளம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை வழங்கப்படும்.
அர்ச்சகர் - மாத சம்பளம் ரூ.13,200 - ரூ.39,900
ஓதுவார் - மாத சம்பளம் ரூ.12,600 - ரூ.39,900
சுயம்பாகி -மாத சம்பளம் ரூ.13,200 - ரூ. 41,800
மேளக்குழு நாதஸ்வர பணி - மாத சம்பளம் ரூ.15,300 - ரூ. 48,700
காவலர் - மாத சம்பளம் ரூ.11,600 - 36,800
மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !