தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள் 5,860 ஆக உயர்ந்துள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தில் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,240 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது.
undefined
சென்ற புதன்கிழமை 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. மொத்தம் 19 வகையான தேர்வுகளை நடத்த இருப்பதாக அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது.
குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024 ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் தேர்வு ஜூன் மாதம் நடந்தப்படும் என்றும் தெரிகிறது. குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ள இருக்கிறது. இத்துடன் சட்டம், தொல்லியல், உடற்கல்வி, நூலகம், கணக்கியல் மற்றும் சிவில் நீதிபதி தேர்வுகளும் அட்டவணையில் உள்ளன.