தமிழகத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 2,113 பேர் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதிலும் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகள் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
undefined
அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும்.அந்த வகையில் குரூப் 1 முதன்மைத்தேர்வு ஆகஸ்ட 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட்பட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் வெளியிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஆண்கள் - 1,333 பேர், பெண்கள் - 780 பேர் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!