TNPSC.. இரு முக்கிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Ansgar R |  
Published : Oct 26, 2023, 11:55 PM ISTUpdated : Oct 26, 2023, 11:59 PM IST
TNPSC.. இரு முக்கிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

சுருக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது இரு முக்கிய பணிகளுக்கான காலி பணியிடம் குறித்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி விவரம் 

விடுதி கண்காணிப்பாளர் cum  உடல் பயிற்சி அதிகாரி பணிக்காக விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி 

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட "உடற்கல்வியில் டிப்ளமோ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி (உயர்நிலை) மற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
ஒரு வருடத்திற்கு குறையாத காலத்திற்கு கற்பித்தல் அனுபவம் இருக்க வேண்டும்.

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

வயது வரம்பு 

SC, ST, MBC, DC, BC(OBCM)கள், BCMகள் மற்றும் விதவைகள் - 18 வயது நிரம்பிய அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஊனமுற்றோர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் நாள் 

தாள் ஒன்று - 21.01.2024 காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை 

தாள் இரண்டு - 21.01.2024 மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை 

ONE TIME REGISTRATION:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 150 ரூபாய் செலுத்தி . ONE TIME REGISTRATION செய்துகொள்ளவேண்டும். இதில் கிடைக்கும் ஐடி மற்றும் பாஸ்வர்ட் வைத்து அனைத்து TNPSC பரிட்சைகளுக்கும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட வகுப்பினருக்கு கட்டண சலுகையும் வழங்கப்படும்.

சம்பள விவரம் 

விடுதி கண்காணிப்பாளர் cum  உடல் பயிற்சி அதிகாரி பணிக்கு குறைத்தபட்சம் 35,400 முதல் அதிகபட்சமாக 1,30,400 வரை வழங்கப்படும். 

கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: ரூ. 30,000 வரை சம்பளம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!
Job Alert: சமைக்க தெரிந்தால் போதும்.! ரூ.70,000 மாத சம்பளம் கிடைக்கும்.!