கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: ரூ. 30,000 வரை சம்பளம்..!

By Manikanda Prabu  |  First Published Oct 26, 2023, 3:21 PM IST

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop centre)  உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு தற்காலிகப் பணியிடங்களாக இப்பதவிகள் நிரப்பப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். காலிப்பணியிட விவரங்கள் பின்வருமாறு;

பதவி: மைய நிர்வாகி

Tap to resize

Latest Videos

** கல்வித்தகுதி: Master of Social Work(MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology/Clinical Psychology;
** வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்;
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்;
** பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்;
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
** மதிப்பூதியம் : ரூ. 30,000
** காலியிடம் : 1

பதவி: முதுநிலை ஆலோசகர் 

** கல்விதகுதி - Master of Social Work(MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology/Clinical Psychology;
** வயது வரம்பு - 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்
** பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
** மதிப்பூதியம் : ரூ. 20,000
** காலியிடம் : 1

பதவி: வழக்கு பணியாளர்

**கல்விதகுதி - Master of Social Work(MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology/Clinical Psychology;
** வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்;
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்;
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்துார் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே  விண்ணப்பிக்கலாம்;
** மதிப்பூதியம் - ரூ. 15,000;
** காலியிடம் - 6

பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் 

** கல்விதகுதி- Graduate with Diploma in Computer/IT;
** வயது வரம்பு – 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்;
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்;
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்;
** மதிப்பூதியம் - ரூ. 18,000;
** காலியிடம் - 1

பதவி: பாதுகாவலர்

** கல்விதகுதி-8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி தோல்வி;
** வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்;
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்;
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்துார் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
** மதிப்பூதியம் - ரூ. 10,000;
** காலியிடம் - 1

பதவி: பல்நோக்கு உதவியாளர்

** கல்விதகுதி-8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி தோல்வி
** வயது வரம்பு – 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
** தகுதி நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக வேண்டும் இருத்தல் வேண்டும்
** 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்;
** கோயம்புத்துார் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
** மதிப்பூதியம் -  ரூ.6,400
** காலியிடம் - 1

வேலைவாய்ப்பு அறிவிக்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.10.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம்,  மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம் கோயம்புத்தூர்-641018

click me!