இன்னும் 2 நாட்களே உள்ளது.. ரூ.45,000 சம்பளத்தில் சென்னையில் வங்கி வேலை.. கல்வித்தகுதி என்ன?

By Ramya s  |  First Published Oct 25, 2023, 2:26 PM IST

சென்னையில் சிஸ்டம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை IndBank வெளியிட்டுள்ளது.


இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான IndBank-ல் உள்ள காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் சிஸ்டம் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை IndBank வெளியிட்டுள்ளது. ஆர்வமுன்ம் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 28-ம் (28.10. 2023) தேதிக்குள் அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indbank காலியிட விவரங்கள் 

Latest Videos

undefined

நிறுவனத்தின் பெயர் Indbank Merchant Banking Services Ltd (Indbank)
காலியிட விவரங்கள் சிஸ்டம் & கண்காணிப்பு பொறியாளர்
மொத்த காலியிடங்கள் 1
ஆண்டு சம்பளம் ரூ.5,00,000 – 5,50,000/-மாதம் (ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ.45,000) 
பணியிடம் : சென்னை

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித் தகுதி: Indbank அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பாரரின் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28-அக்டோபர்-2023 அன்று அல்லது அதற்கு முன் recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: indbankonline.com
Indbank ஆட்சேர்ப்பு 2023 முக்கிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி 20/10/2023
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 28/10/2023

தேர்வு செயல்முறை :

சிஸ்டம் மற்றும் சர்வைலன்ஸ் இன்ஜினியர் பணிக்கான தேர்வு நேர்காணல் அடிப்படையில் நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான corporate.indbankonline.com ஐப் பார்வையிடலாம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தற்போதைய காலியிடங்களை சரிபார்க்கவும்.
  • தேவையான அறிவிப்பைக் கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28/10/2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்த்து, விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் பிரிவில் கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை pdf: இங்கே கிளிக் செய்யவும்

click me!