
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலிப் பணியிடத்திற்கு நேரடி நியமன முறையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கோவையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரே நபர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளார். விண்ணப்பிக்கும் நபருக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! தேர்வு எழுதத் தேவையில்லை!
வயது வரம்பு:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் 18 முதல் 34 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். அதாவது, 01.07.2023 அன்று 34 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு தளர்வும் உண்டு.
ஊதியம்:
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியில் சேரும் நபருக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
இந்தப் வேலைவாய்ப்புக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்படும். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பத்தை ட்வுன்லோட் செய்துகொள்ளலாம்.
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/10/2023101190.pdf
இந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுத்து முழுமையாக நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி பின்வருமாறு: ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மாதம்பட்டி மெயின்ரோடு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் - 641109.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2023
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு அறிவிப்பு