டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! தேர்வு எழுதத் தேவையில்லை!

By SG Balan  |  First Published Oct 25, 2023, 10:21 AM IST

13 காலிப் பணியிடங்களுக்கும் போட்டியிட விரும்புகிறவர்கள் அக்டோபர் 27ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.


சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட உதவியாளர், திட்ட இணை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் முடிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். சென்னையில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தில் திட்ட உதவியாளர், திட்ட இணை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது. தற்காலிக முறையில் ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

மொத்தம் 13 காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்தப் வேலைவாய்ப்புக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நேரடியாக அக்டோபர் 27ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

Project Assistant

இந்தப் பணிக்கு 3 காலி இடங்கள் உள்ளன. கேட்டரிங்கில் டிப்ளமோ படித்தவர்களும் பயோடெக்னாலஜியில் பி.எஸ்.சி. முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 சம்பளம் கொடுக்கப்படும்.

Project Associate - I

இந்தப் பணிக்கு 6 காலிப் பணியிடங்கள் உள்ளன. தொல் தொழில்நுட்பத்தில் எஞ்சினியரிங் படித்தவர்களும் வேதியியல், மைக்ரோபயாலஜி மற்றும் தொடர்புடைய துறைகளில் பி.எஸ்.சி படித்தவருகளும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வயது 35 க்குள் இருப்பது அவசியம். மாதச் சம்பளம் ரூ.25,000 கொடுக்கப்படும்.

Project Associate-II

இந்தப் பணிக்கு ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளார். மூலக்கூறு உயிரியல் அல்லது பயோடெக்னாலஜியில் எம்.எஸ்.சி. படித்தவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். இதற்கு வயது வரம்பு 35. இந்த வேலைக்கு ரூ.28,000 சம்பளம் கிடைக்கும்.

Junior Research Fellow

இந்தப் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. வேதியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். 28 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம். சம்பளம் ரூ. 31,000.

Senior Research Fellow

இந்த வேலைக்கும் ஒரே நபர் தேர்வு செய்யப்படுவார். மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி துறைகளில் எம்.எஸ்.சி. முடித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். ஊதியம் ரூ. 35,000 வழங்கப்படும்.

அனைத்துப் பணியிடங்களும் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை மறுநாள் (27.10.2023) சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக்கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து கூடுதல் தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்யலாம்.

click me!