மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. TNPSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !

By Raghupati R  |  First Published Jul 25, 2022, 6:33 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலம் விண்ணப்பத்தாரர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். வருடந்தோறும் TNPSC Group I, TNPSC Group II, TNPSC Group III, TNPSC Group IV (Village Administrative Officer-VAO) போன்ற தேர்வுகளை நடத்தி வருகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி உதவி இயக்குனர் என்ற பணியிடத்துக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள காலி பணியிடங்கள் 11 ஆகும். டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பை முழுவதும் பார்க்கலாம்.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் மனையியல் அல்லது உளவியல் படிப்பில் முதுகலைப் பட்டம், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல், சமூகவியல் போன்ற படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணமாக 150 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை இணைய வழி அதாவது ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கணினி வழித் தேர்வு நடத்தப்படும் என்றும், இதில் தேர்வானவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 16 ஆகும். இக்காலி பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் இதுபற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

click me!