இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா? வெளியானது ஆட்சேர்ப்பு அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

Published : Jul 24, 2022, 07:49 PM ISTUpdated : Jul 24, 2022, 07:50 PM IST
இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா? வெளியானது ஆட்சேர்ப்பு அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

சுருக்கம்

இந்திய ராணுவத்தில் ஒரு மாதத்தில் மூன்று பெரிய ஆட்சேர்ப்புகளை எடுப்பதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. 

இந்திய ராணுவத்தில் ஒரு மாதத்தில் மூன்று பெரிய ஆட்சேர்ப்புகளை எடுப்பதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த மூன்று ஆட்சேர்ப்புகளும் அதிகாரி மட்டத்தில் இருக்கும். முதல் (SSC) ஷாட் சர்வீஸ் கமிஷனில், தொழில்நுட்ப பதவிகளுக்கான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 முதல் தொடங்குகிறது.  மேற்கண்ட இந்த படிப்புகளுக்கான வகுப்பு, சென்னை, தமிழ்நாடு அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) ஏப்ரல் 2023 தொடங்கும். இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜூலை 26 அன்று தொடங்கும் மற்றும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 24, 2022 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் மொத்தம் 189 காலிப்பணியிடங்கள் நிரப்படும். 

காலிபணியிட விவரம்:

ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்) 60 ஆண்கள் பிரிவுக்கு, 175 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்) 31 பெண்கள் தொழில்நுட்ப படிப்பு பிரிவுக்கு, 14 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், SSC (W) Tech & SSC (W) (Non Tech) (UPSC அல்லாத) (பாதுகாப்புப் பணியாளர்களின் விதவைகள் மட்டும்) பிரிவுக்கு, தலா 02 காலியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: 

ஊதிய நிலை 10ன் கீழ் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

தகுதிகள்:

விண்ணப்பதாரர் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 ஆவது SSC டெக் ஆண் மற்றும் 31 ஆவது SSC டெக் பெண் பாடப்பிரிவு ஏப்ரல் 2023 ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 முதல் எடுக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 24. 
இதற்கு, ஆண் மற்றும் பெண்களுக்கான 53வது எஸ்எஸ்சி என்சிசி சிறப்பு நுழைவுப் படிப்பு ஏப்ரல் 2023ல், ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 ஆகும்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NCC B அல்லது C சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சட்டப் பட்டதாரிகளுக்கான 30-வது SSC JAG நுழைவுத் திட்டப் படிப்பு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22 செப்டம்பர் 2022 ஆகும். விண்ணப்பிக்கும் வேட்பாளர் எல்எல்பியில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப வயது வரம்பு 21 முதல் 27 ஆண்டுகள்.

விண்ணப்பிப்பது எப்படி? 

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: ஜூலை 26, 2022. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 24, 2022. விண்ணப்ப செயல்முறை ஜூலை 26 அன்று தொடங்கும் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 24, 2022 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்