டி.என்.பி.எஸ்.சி-யின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நிருபர் பணிகளுக்கான வாய்மொழித்தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி-யின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நிருபர் பணிகளுக்கான வாய்மொழித்தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக டி.என்.பி.எஸ்.சி மூலம் தமிழக சட்டப்பேரவை தலைமை செயலாகப் பணிகளில் அடங்கிய ஆங்கிலம் மற்றும் தமிழ் நிருபர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு செப். 13 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 7500 காலிப் பணியிடங்கள்! எஸ்எஸ்சி தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு
மேலும் இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 13.12.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 21.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த பிப்.22 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: நெருங்கும் நீட் தேர்வு... அட்மிட் கார்டு வெளியீடு எப்போது?
இதை அடுத்து வாய்மொழி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று வாய்மொழித்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன்படி, வரும் மே.12 ஆம் தேதி அன்று வாய்மொழி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.