தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அந்தந்த துறை சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகராட்சி துறையில் காலியாக 1933 பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
undefined
உதவியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்க்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள் : 1933
உதவி பொறியாளர் (மாநகராட்சி) : 146
உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) : 145
உதவி பொறியாளர் (நகராட்சி) : 80
உதவி பொறியாளர் (சிவில்) : 58
உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14
உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) : 71
உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி) : 156
உதவி பொறியாளர் (திட்டம் - நகராட்சி) : 12
இளநிலை பொறியாளர் : 24
தொழில்நுட்ப உதவியாளர் : 257
வரைவாளர் (மாநகராட்சி) : 35
வரைவாளர் (நகராட்சி) : 130
பணிமேற்பார்வையாளர் : 92
நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367
துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி) : 244
சம்பளம் :
ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
மற்ற பணிகளுக்கு ரூ. 35,000 முதல் ரூ.1,38,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் வரும் 12.03.2024, மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்களை திருத்தலாம். அதன்பின்னர் திருத்த முடியாது.