வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Sep 7, 2022, 2:56 PM IST

வட பழநி முருகன் கோவிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


மொத்த காலி பணியிடங்கள்: 23 

பணியின் பெயர்: 

Tap to resize

Latest Videos

இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  ஓட்டுநர், உதவி மின் பணியாளர், நாதஸ்வரம், உதவி அர்ச்சகர், உதவி பரிச்சாரகம் , உதவி சுயம்பாகம், வேதபாராயணம் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 

விண்ணப்பிக்கும் தேதி: 

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்து மதத்தினைச் சார்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காலை 10.10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
 

hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி: 

துணை ஆணையர்/ செயல்அலுவலர், 
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், 
வடபழநி, 
சென்னை-26 

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரகள் 18 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 

இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஒட்டுநர் பணியிடங்களுக்கு மாதம் ரூ 18500- ரூ58,600 வரை சம்பளமாக வழங்கப்படும். 

உதவி மின் பணியாளர்- ரூ.16,600 - 52, 400 

நாதஸ்வரம்    - ரூ 19500- 62,000

உதவி அர்ச்சகர் - ரூ. 15,900- 50,400 

உதவி சுயம்பாகம், உதவி பரிச்சாரகம் - ரூ.10,000 - 31,500 

வேதபாராயணம்  - ரூ. 15,700 - 50,000

மேலும் படிக்க:NEET UG Result 2022 : நீட் தேர்வு முடிவு வெளியானது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

கல்வித் தகுதி: 

இளநிலை உதவியாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

தட்டச்சர் - அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தல் முதுநிலை (அல்லது) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஓட்டுநர் - 8 ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒராண்டு ஒட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர் - அரசால்/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 நாதஸ்வரம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 உதவி அர்ச்சகர் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகம்/ உதவி சுயம்பாகம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேதபாராயணம் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்ட தற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை காண

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf

மேலும் படிக்க:மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம் !

click me!