நாகப்பட்டினத்தில் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் :
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
பணி: தட்டச்சர்
மொத்த காலி பணியிடங்கள்: 15
விண்ணப்பிக்க கடைசி தேதி:
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் http:/districts.ecourts.gov.in/nagapattinam என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து அதனுடன் ஒரு சமீபத்திய புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளவது எப்படி..? முழு விவரம்
அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
நாகப்பட்டினம்
வயது:
விண்ணப்பத்தார்கள் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்பத் தேர்வான தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.20,600 - 65,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் படிக்க:அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மாணவர் சேர்க்கை எப்போது..? விவரம் உள்ளே