BEL நிறுவனத்தில் காலிபணியிடம் அறிவிப்பு…விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

By Narendran S  |  First Published Sep 6, 2022, 5:20 PM IST

பெல்(BEL) நிறுவனத்தில் (பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பெல்(BEL) நிறுவனத்தில் (பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Engineer-I பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கல்வித் தகுதி: 

  • Project Engineer-I பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, Electronics & Communication, E&T, Communication, Telecommunication, Mechanical பாடப்பிரிவில் BE / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 

ஊதியம்: 

  • Project Engineer-I பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை: 

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: 

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
click me!