இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பதவி : பொது மேலாளர் (நிதி) : 02 காலியிடங்கள்
வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் :
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகம்/கணக்குகளில் இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து ICAI/ICWAI/MBA (நிதி) அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசின் நிதி/கணக்குகள் தொடர்பான ஏதேனும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக இருத்தல் அவசியம்.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
பதவி : மூத்த நூலகர் & தகவல் அதிகாரி: 01 காலியிடம்
வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி :
முறையாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் :
மத்திய அரசு/மாநில அரசு/தன்னாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வ அமைப்பு/ பொதுத்துறை நிறுவனம்/பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அல்லது கல்வி நிறுவனத்தின் கீழ் உள்ள நூலகத்தில் 05 வருட அனுபவம் இருத்தல் அவசியம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு