கவனத்திற்கு !! இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..

Published : Jul 07, 2022, 04:48 PM IST
கவனத்திற்கு !! இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. நிர்வாக பயிற்சி மையத்திற்கான முதல்வர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணினி இயக்குபவராக மாத தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. நிர்வாக பயிற்சி மையத்திற்கான முதல்வர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணினி இயக்குபவராக மாத தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளது.

மேலும் படிக்க:டெட் தேர்வை முடித்தவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..

இந்நிலையில் இதற்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து கேட்டுத் தெரிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் பணியிடத்திற்கு 30 வயதிற்கு மேற்பட்ட 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களுக்கு முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் உதவியாளர் அல்லது கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பவர்கள், 18 வயதிற்கு மே 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் படிக்க:38% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த அதிர்ச்சி.!

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டய படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தொகுப்பூதிய அடிப்படையில் முதல்வர் பணியிடத்திற்கு மாதம் ரூ.35,000ம் , உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000ம் அளிக்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது

PREV
click me!

Recommended Stories

சம்பளம் பத்தலையா? பாஸ் கிட்ட கேட்க பயமா? கவலையை விடுங்க.. உங்களுக்காக வாதாட வந்தாச்சு AI!
அட.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! உங்க வேலையை சும்மா 'ஜுஜுபி'யா மாற்றும் 9 AI டூல்ஸ்!