தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை (TN PWD) தங்கள் நிறுவனத்தில் 500 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. கிராஜுவேட் அப்ரெண்டிஸ் மற்றும் டிப்ளமோ அப்ரெண்டிஸ் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் சேர இது ஒரு சிறந்த வாய்ப்பு.
எனவே, இந்த அறிவிப்புக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், 16/02/2023 முதல் 31/03/2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் பிற தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அமைப்பு : தமிழ்நாடு பொதுப்பணித்துறை (TN PWD)
பணியின் பெயர் : பட்டதாரி அப்ரெண்டிஸ், டிப்ளமோ அப்ரெண்டிஸ்
தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ
காலியிடங்கள் : 500
தொடக்கத் தேதி : 16.02.2023
கடைசி தேதி : 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
காலியிட விவரங்கள் :
பட்டதாரி அப்ரெண்டிஸ் - 355
டிப்ளமோ அப்ரெண்டிஸ் - 145
கல்வி தகுதி :
E, B.Tech, Diploma விண்ணப்பதாரர்கள் தங்களின் கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டிப்ளமோ அப்ரெண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சம்பள விவரங்கள் :
பட்டதாரி அப்ரண்டிஸ் ரூ. 9,000/- PM
டிப்ளமோ அப்ரண்டிஸ் ரூ. 8,000/- PM
தேர்வு முறை :
பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை விண்ணப்பதாரர்களை பணியமர்த்த நேர்காணல் முறையை பின்பற்றும்.
இந்த விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை அணுக வேலை விண்ணப்பத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும். தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துள்ளீர்களா ? மற்றும் அது சரியானதா ? என சரிபார்க்கவும். பிறகு விண்ணப்பிக்கவும்.