தமிழகத்துக்கு வரவிருக்கின்ற 3 டைடல் பூங்காக்களினால் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்கப்படும் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதையும் படிங்க..ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளும் நேற்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தொழில்வளர்ச்சி மற்றும் இளைஞர் நலன், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க 2023 - 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 1,44, 028 கோடி செலவில், 2,14,478 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என பல்வேறு அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க..TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?
இதையும் படிங்க..‘காம வெறி’ நாயை கூட விட்டு வைக்காத வெறிபிடித்த சைக்கோ - வைரல் வீடியோ சர்ச்சை