காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 23 மற்றும்24 ஆம் தேதிகளில் கோவையில் நடபெறவுள்ளதாக தெரிவித்க்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் தேர்வு
காவல்துறை பணியில் சேர்வது பலரது கனவாக இருக்கும் அந்த வகையில், தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக, கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு கடிதம் வந்ததா..?
தகுதித் தேர்வானது காலை 6.30 மணிக்கு முதல் அணிக்கும், இரண்டாம் அணிக்கு காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி காலை 8.30 மணிக்கும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள உள்ள தேர்வர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பதாரர்கள் தோ்வாணையத்துக்கு விண்ணப்பம் அளிக்கும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் எனத் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.