ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விரிவுரையாளர் தேர்வில் முதல்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 24 முதுநிலை விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என, மொத்தம் 155 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் படிக்க:முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான நியமனம்.. இந்தெந்த ஆவணங்களை உடனே விண்ணப்பிக்கவும்.. தேர்வு வாரியம் அறிவிப்பு
இவற்றை நிரப்ப, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்றுதிறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்.