உங்களை உடனடி பணக்காரர் ஆக செய்யும் வேலை வாய்ப்புகள்.. இது மட்டும் தெரிந்தால் போதும்..!

By Kevin Kaarki  |  First Published Jun 28, 2022, 2:53 PM IST

டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களால் இந்திய சந்தையில் ஸ்டார்ட் அப் சூழல் பெருமளவு வளர்ந்து வருகிறது.


இந்தியாவில் தொழில்நுட்ப துறை அதிவேகமாக மாறி கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்திய வியாபாரங்களை அடியோடு மாற்றி அமைத்து விட்டது. இது மட்டும் இன்றி டிஜிட்டல் யுகம், தானியங்கி முறை மற்றும் பல்துறை பரிமாணங்களின் முக்கியத்துவத்தை கொரோனா வைரஸ் பெருந்தொற்று உணர்த்தி இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: 100 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு... மாஸ் காட்டிய ஐஐடி மெட்ராஸ்...!

Tap to resize

Latest Videos

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மட்டும் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களால் இந்திய சந்தையில் ஸ்டார் அப் சூழல் பெருமளவு வளர்ந்து வருகிறது. மேலும் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

இவற்றின் மூலமாக பல்வேறு பழைய தொழில்நுட்பங்கள் தற்போது காலாவதியாகி விட்டன. இதன் காரணமாக புது தொழில்நுட்பங்கள் மற்றும் புது வித திறன் முறைகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அந்த வரிசையில், தற்போதைய காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டித் தரும் வேலை வாய்ப்புகள் எவை என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: Bank Job : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி வாய்ப்பு! - விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சைபர் செக்யுரிட்டி: டிஜிட்டல் யுகம் மற்றும் பெருமளவு டேட்டா பயன்பாடு காரணமாக சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஹேக்கர்கள் மற்றும் சைர்  குற்றவாளிகள் மிக முக்கிய தரவுகளை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற காரணங்களால் நெட்வொர்க் செக்யுரிட்டி என்ஜினியர், சைபர் செக்யுரிட்டி அனலிஸ்ட், சைபர் செக்யுரிட்டி ஆர்கிடெக்ட், இன்பர்மேஷன் செக்யுரிட்டி மேனேஜர் போன்று பல்வேறு பணிகளை செய்வதற்கான தேவை நாளுக்கு நாள் பெருமளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதையும் படியுங்கள்: அக்னி பத் திட்டத்தின் கீழ் கடற்படையில் வேலை வாய்ப்பு..! எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?

பிளாக்செயின்: என்.எப்.டி., க்ரிப்டோகரென்சி மற்றும் மெட்டாவெர்ஸ் உள்ளிட்டவை தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. இதன் காரணமாகவே பிளாக்செயின் வல்லுனர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. 2019 ஆண்டு பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் தொடர்பான முதலீடு 2.7 பில்லியன் டாலர்களாக இருந்து உள்ளன. 2023 வாக்கில் இந்த துறையில் மொத்த முதலீடு 16 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பிளாக்செயின் சார்ந்த சிஸ்டம்களை உருவாக்கும் திறன் கொண்ட பிளாக்செயின் டெவலப்பர்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி பல்வேறு பிளாட்பார்ம்களுக்கு யூசர் இண்டர்பேஸ் மற்றும் செயலிகளை டிசைன் செய்து உருவாக்கும் திறன் கொண்ட பிளாக்செயின் வெப் டெவலப்பர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

செயற்கை நுண்ணறிவு: சர்வதேச வளர்ச்சியை கருத்தில் கொண்டு பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தேவை இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது. உலக அளவில் அதிக அளவு வளர்ச்சி பெறும் வேலை வாய்ப்பு பிரிவுகளில் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. மிக முக்கிய இடத்தில் உள்ளது. 2026 வாக்கில் இந்த துறை சார்ந்து பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.15 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளவுட் புரபஷனல்: பல்வேறு நிறுவனங்களும் தங்களின் தரவுகளை கிளவுடிற்குள் கொண்டு வரத் துவங்கி உள்ளன. இதன் காரணமாக கிளவுட் கம்ப்யூட்டிங், கிளவுட் மைக்ரேஷன், அஸ்யூர் டெக்னாலஜிஸ், கிளவுட் செக்யுரிட்டி போன்ற பணிகளை மேற்கொள்வோருக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்தியாவில் 2026 வாக்கில் சுமார் இருபது லட்சம் வேலை வாய்ப்புகள் கிளவுட் டொமைன்களில் தான் இருக்கும் என நாஸ்காம் கணித்து இருக்கிறது.

ஐ.ஓ.டி. புரபஷனல்: மின்துறை, சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், மருத்துவம், சுகாதாரத் துறை என பல்வேறு பிரிவுகளில் ஐ.ஓ.டி. (IoT) சார்ந்த சிஸ்டம்கள் கொண்டு இயந்திரம் மற்றும் உபகரணங்களை கண்காணிக்கவும், இயக்கவும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் ஐ.ஓ.டி. பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. 

click me!