தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமாக இந்த பதிவில் காணலாம்.
பணி விவரம்
ஜீப் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர், திடக்கழிவு மேலாண்மை நிபுணர்
மாவட்டங்கள்
ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கூறிய பணிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எப்படி விண்ணப்பிப்பது?
அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். உதாரணமாக கோவை மாவட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் Coimbatore.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு, ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
அரசு அறிவிப்பில் கண்டுள்ளபடு 15,700 ரூபாய் முதல் 62,000 ரூபாய் வரை பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
மொத்தம் 4,062 பணியிடங்கள்.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. மத்திய அரசு பள்ளியில் வேலை.. முழு விவரம் இதோ..