தமிழகத்தில் வீணாகும் 83 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்! அகில இந்திய ஒதுக்கீட்டால் வந்த புதிய சிக்கல்!

By SG BalanFirst Published Oct 14, 2023, 10:57 AM IST
Highlights

அகில இந்திய ஒதுக்கீட்டில் எஞ்சி இருக்கும் இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 365 இடங்கள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் வீணாக காலியாக விடப்பட்டுள்ளன. இதனால் மாணவர் சோ்க்கை தேதியை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு திரும்ப வழங்காதுதான் இதற்குக் காரணம் என்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் எஞ்சி இருக்கும் இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுக்கப்படும். எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும்.

நாகை முதல் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (DGHS) மருத்துவக் கலந்தாய்வு குழு (MCC) இணையவழியில் இந்தக் கலந்தாய்வை நடத்தும். இந்த ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 15 சதவீதம் இடங்கள் போக மீதமுள்ள 85 சதவீதம் இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு மாநில அரசே மாணவர் சோ்க்கை கலந்தாய்வு நடத்தும்.

இந்தக் கல்வியாண்டில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வுகள் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இன்னும் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்கள் (நிா்வாக ஒதுக்கீடு) காலியாக உள்ளன.

பிடிஎஸ் படிப்பில், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 24 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்கள் மற்றும் தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் 204 இடங்களும் காலியாக உள்ளன. இப்போது மாணவர் சோ்க்கைக்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலியாகவுள்ள இடங்கள் தமிழக அரசுக்குத் திருப்பி அளிக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கூறியுள்ளது.

கலந்தாய்வு நடத்துவதற்கான அவகாசமும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களையும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்களும் 279 பிடிஎஸ் இடங்களும் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டாமல் வீணாக காலியாக இருக்கும் நிலை உள்ளது.

SSC February Exam Calendar 2024 : எஸ்எஸ்சி தேர்வு தேதிகள் வெளியீடு.. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

click me!