
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் நர்ஸ் பணிக்கு 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர்ந்தால் 62 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
TNMRB (டி.என்.எம்.ஆர்.பி.) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Medical Recruitment Board) தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 13.09.2023 அன்று 18 முதல் 42 வயதுக்குள் ஆனவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
மொபைல் போனை ரீ-ஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மையா? பல பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய வழி இதுதான்!
கல்வித்தகுதி:
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சிப் படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைப்ஸ் கவுன்சிலில் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதும் அவசியம்.
சம்பளம்:
ஆக்சிலரி நர்ஸ் மற்றும் கிராம சுகாதார நர்ஸ் ஆகிய இரண்டு பணியிலும் லெவல் 8 பணியாளர்களின் ஊதிய முறையில் சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்ச மாத ஊதியம் 19,500 ரூபாய். அதிகபட்சமாக ரூ.62,000 வரை ஊதியம் கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.600 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி பிரிவினரும் கணவரை இழந்த பெண்களும் ரூ.300 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
தேர்வு முறை:
நேர்க்காணல் எதுவும் நடத்தப்படாது. எழுத்துத் தேர்வும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிகப் பணி என்பதால், தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf
OnePlus 12: இனிமேல் ஐபோன் எல்லாம் தூசு... இதுதான் மாஸ்... தட்டித்தூக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன்!