பொங்கல் தினத்தில் SBI தேர்வு; தேதியை மாற்றி அமைக்ககோரும் தேர்வர்கள்

By Velmurugan sFirst Published Jan 7, 2023, 12:48 PM IST
Highlights

பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி கிளர்க் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தமாக 5 ஆயிரத்து 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் 355 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியாகின.

உறுப்புகளை தானமாக வழங்கி இருவருக்கு உயிர் கொடுத்த ஒன்றரை வயது குழந்தை

பொதுவாக முதல் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் போது தான் அடுத்த கட்டமான முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். அதன்படி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 15ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிக்கப்பட்ட அதே தினத்தில் தான் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக இதுபோன்ற நாடு தழுவிய போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் போது ஏதேனும் மாநிலத்தில் பண்டிகை, விடுமுறை, வேறு ஏதேனும் அரசு தேர்வு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வரவில்லையா? இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ஆனால், தற்போது பொங்கல் பண்டிகையில் இந்த எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு தேர்வுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வானது அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படாது. மாறாக 13 நகரங்களில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது என்பதால் பொங்கல் பண்டிகையில் தேர்வர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதும் கடினம் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்வு தேதியை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!