இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (TNHRCE) 48 வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முறை போன்றவை இதில் காண்போம்.
அமைப்பு : இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணியின் பெயர் : ஸ்தபதி
தகுதி : இளங்கலை பட்டம்
காலியிடங்கள் : 48
தொடக்கத் தேதி : 16.12.2022
கடைசி தேதி : 21.01.2023
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல்
காலியிட விவரங்கள் :
*மண்டல ஸ்தபதிகள் - 10
*உதவி ஸ்தபதிகள் - 38
*மொத்தம் - 48
கல்வி தகுதி :
இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களின் ஸ்தபதி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..NPCIL Recruitment 2023 : இந்திய அணுசக்தி கழகத்தில் 89 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க !
தகுதி :
மண்டல ஸ்தபதிகள் மற்றும் உதவி ஸ்தபதிகள் பாரம்பரிய கட்டிடக்கலையில் தொழில்நுட்ப இளங்கலை அல்லது பாரம்பரிய சிற்பக்கலையில் நுண்கலை இளங்கலை பெற்றிருத்தல் அவசியம்.
சம்பள விவரங்கள் :
*மண்டல ஸ்தபதிகள் : ரூ.25000/- மாதம்
*உதவி ஸ்தபதிகள் : ரூ.20000/- மாதம்
தேர்வு முறை :
*குறுகிய பட்டியல்
*நேர்காணல்
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhrce.gov.in சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பினை பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு அறிவிப்பினை பார்த்து, விண்ணப்பதாரர்கள் பதவிக்கு தகுதியானவரா என்று சரி பார்க்க வேண்டும். விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். சரியான முகவரிக்கு, அறிவிக்கப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!