10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளிகியாகிறது.! டவுன்லோடு செய்வது எப்படி?

By vinoth kumarFirst Published Mar 17, 2023, 10:27 AM IST
Highlights

தமிழகத்தில் 11ம் வகுப்பு 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாக உள்ளதாக தேர்வுத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 11ம் வகுப்பு 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

06.04.2023 - தமிழ் 
10.04.2023 - ஆங்கிலம் 
13.04.2023 - கணிதம் 
15.04.2023 விருப்ப மொழிப் பாடம் 
17.04.2023 -அறிவியல்
 20.04.2023 - சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. 

இந்த பொதுத்தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால் டிக்கெட் இன்று வெளியாக உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க;- TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இது தவிர 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தங்களுக்குரிய தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- சொன்னா நம்பமாட்டீங்க.. 10ம் வகுப்பு முடித்தாலே மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. முழு விவரம் உள்ளே..!

click me!