GATE 2023 தேர்வு முடிவுகள் : பொறியியல் படிப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு எனப்படும் கேட் (GATE) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஐஐடி கான்பூர்-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE Exam)
ME., M.Tech., M.Arc., M.Plan உள்ளிட்ட பொறியியல் துறைக்கான மேற் படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் IIT மற்றும் IISE போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.
கேட் தேர்வுகளை, இந்தியாவில் உள்ள ஐஐடி. நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டுக்கான கேட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வரும் 2023-24ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, கடந்த பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தற்காலிக விடைகுறிப்புகளும் வெளியிடப்பட்டது.
கேட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்நிலையில் நடந்து முடிந்த கேட் (Gate) நுழைவு தேர்வுக்கான முடிவை ஐஐடி கான்பூர் இன்று வெளியிட்டது. https://gate.iitk.ac.in/ என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை நேரடியாக அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HRCE Recruitment 2023: இந்து சமய அறநிலையத்துறையில் 281 பேருக்கு வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
இந்திய நாடாளுமன்றத்தில் வேலை.. மாதம் 1 லட்சம் வரை சம்பளத்தில் காத்திருக்கிறது மத்திய அரசு வேலை