HRCE Recruitment 2023: இந்து சமய அறநிலையத்துறையில் 281 பேருக்கு வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

By SG Balan  |  First Published Mar 16, 2023, 7:12 PM IST

இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தமிழக் கடவுளாகப் போற்றப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பிரசித்த பெற்ற இந்தக் கோவிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலக உதவியாளர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துநர், ஆசிரியர் என பலவிதமான பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கியுள்ளது. அதன்படி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் வாயிலாக கோயிலில் வெவ்வேறு பணிகளைச் செய்வதற்குத் தேவையான 281 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tap to resize

Latest Videos

காலி பணியிடங்கள்:

காலிப் பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் 174 பணியிடங்கள் உள்ளன. மற்றொரு பிரிவில் 82 பணியிடங்கள் உள்ளன. இன்னும் இருவேறு பிரிவுகளில் முறையே 14 மற்றும் 19 பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம் 281 காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு: விண்ணப்பிப்பது எப்படி?

இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் மட்டும் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வயது வரம்பு:

18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, 01.07.2022 அன்று 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருப்பவர்கள் இந்த வேலைக்கான வயது வரம்புக்குள் வருவார்கள். வெவ்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித் தகுதி போன்ற விவரங்கள் பற்றி அறிவிப்பில் விரிவாக்கக் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 07.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் கீழே கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி, திண்டுக்கல் மாவட்டம் - 624 601

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு - விண்ணப்பப் படிவம்

click me!