கவனத்திற்கு !! 1- 10 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..

By Thanalakshmi VFirst Published Oct 1, 2022, 6:13 PM IST
Highlights

சிறுபான்மை பள்ளிப்படிப்பு கல்வித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அக்டோபர் 15 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 
 

கடந்த 2008 -09 ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுமான்பை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 100% நிதியால் செயல்படும் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு  நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் சிறுபான்மை பள்ளிப்படிப்பு கல்வித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்.30 ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அக்டோபர் 31 ஆம் தேதி வரை உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி செய்துக் கொள்ளலாம்.  மேலும் மாவட்ட /மாநில /மத்திய அமைச்சக அளவிலான சரிபார்ப்பு  பணிகள் நவம்பர் 15ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது உதட்டில் கொத்து வாங்கிய பாம்பு பிடி வீரர்..!

https://scholarships.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த உதவிதொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். 

அதுபோல் மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தகுதியான 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 வரையிலும், கற்பிப்புக் கட்டணம் ரூ.3,500 (மாதம் 350- 10 மாதத்துக்கு) வரையிலும் வழங்கப்படுகிறது.

இதுக்குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள minorityaffairs.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:திருப்பதியில் இன்று இரவு கருட சேவை.. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு..

click me!