வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 அன்று இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) நடைபெற உள்ளது.
இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்களால் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. மேலும், இம்முகாமில் வருகைப்புரியும் வேலைநாடுநர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கு பதிவுகள் செய்து, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க..ரூ.50,000 சம்பளத்தில் அரசு துறையில் சூப்பர் வேலை.. தேர்வு கிடையாது.. இன்று தான் கடைசி நாள்.. விவரம் உள்ளே
அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளது. இம்முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!