SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..

By Thanalakshmi V  |  First Published Sep 8, 2022, 11:24 AM IST

SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர் : SBI வங்கி

மொத்த காலி பணியிடங்கள்: 5,000

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Junior Associate (Customer Support & Sales)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

நேற்று அறிவிப்பு வெளியான நிலையில் வரும் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers)

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி/ நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. 

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிபணியிடம் .. ரூ.18,536 தொகுப்பூதியத்தில் சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரர்கள் 20 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

அரசு மற்றும் அரசால் அங்கீகரக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்விநிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு: 

தேர்வில் பங்கேற்க உள்ளூர் மொழி அறிவு கட்டாயம்.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

click me!