அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இருப்பினும் தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு முட்டுக்கட்டையாக நீட் தேர்வு இருக்கிறது என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் நிலைப்பாடாக உள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முன்மொழிந்து, மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
தமிழக அரசின் கூற்றுப்படி, ஒரே நாளில் நாடெங்கும் நடத்தப்படும் நீட் தேர்வு, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை.
மேலும் செய்திகளுக்கு..பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எப்போது தொடங்கி வைக்கிறார் ? வெளியான தகவல்!
நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்ளுக்கு எதிராகவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதுகுறித்து பேசிய அவர், ‘ நீட் , CUET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. CUET தேர்வுடன் NEET, JEE தேர்வுகளை இணைத்து ஒரே நுழைவுத்தேர்வாக அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்