அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
பணியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர்
விண்ணப்பிக்கும் தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் https://ariyalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் - 621 704.
மேலும் படிக்க: மாதம் ரூ.65,000 சம்பளத்தில் நீதித்துறையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் அடிப்படையில் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 40 க்குள் இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒரு வருட கால ஒப்பந்தம் அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு (PG Diploma in Counseling and Communication) பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அனுபவம்:
தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் ஆற்றுப்படுத்துதல் பணியில் ஒரு ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் படிக்க:வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே