என்எல்சியில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் தகுதி..? எப்போது விண்ணப்பிக்கலாம்.? வெளியான தகவல்..

By Thanalakshmi VFirst Published Aug 21, 2022, 3:42 PM IST
Highlights

என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 
 

என்எல்சி இந்திய நிறுவனம் அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க:Madras Day : சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை! 350 ஆண்டுகால வரலாற்றை தாங்கிய முதல் கோட்டை!

காலி பணியிடங்கள் : 

பல்வேறு துறைகளில் மொத்தமாக 226 இடங்கள் காலியாக உள்ளன. 

அனல்மின் நிலை  துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் - 51 

அறிவியல் துறையில் மேனேஜர் பதவி- 22 

சுரங்கம் துறைகளில் மெக்கானிக்கல் பொறியாளர் - 45 

எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) - 23 

புவியியல் துறையில் மேனேஜர் பதவி - 2 

தொழில் பொறியியல் துறை - 5 

வேதியியல் துறை -  2 

சிவில் துறை - 1 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் - 5 

சிவில் பொறியாளர் மற்றும் அறிவியல் (நிர்வாகப் பணி) - 7 

மேலும் படிக்க:எஸ்.ஐ உடல் தகுதி தேர்வு கோவையில் நடைபெறுகிறது..! அழைப்பு கடிதம் வந்ததா..? வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

முக்கிய குறிப்பு: 

கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், பணிக்கான விவரங்கள், இட ஒதுக்கீடு போன்றவை வரும் 25ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து காலியிடங்கள்/நியமனங்கள் குறித்த தகவல்களை www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். 
 

click me!